Last Updated:
சவுதி அராம்கோ நிறுவன கிடங்கு மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி!
உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான சவுதி அராம்கோ நிறுவன கிடங்கு மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
சவுதி அரேபியாவின் ராஸ் டனுராவில் இருந்த கிடங்கின் மீது ஷாஹேத் 136 டிரோனை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்தப் பகுதி புகை மண்டலமானது. தீ கட்டுப்படுத்தப்பட்டதாகவும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, அமெரிக்காவின் கடற்படை தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது.
ஈரான்
மேலும், தங்கள் நாட்டின் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால், இஸ்ரேலில் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் சைரன் ஒலிக்கப்பட்டது. குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புகை வெளியேறியதால் அருகில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தத் தாக்குதலை அமெரிக்க தூதரகம் உறுதிசெய்யவில்லை.


