2018ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐதராபாத் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணி, இந்த சீசனில் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துதான் சாதித்து வந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் பார்ட் டைம் ஸ்பின்னர்களை வைத்து வென்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஐதரபாத் அணி 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ஷாபாஸ் அகமது 18 ரன்கள் எடுத்ததோடு, பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால், அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த வெற்றிக்குப் பின் பேசிய ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், இந்த சீசன் முழுக்கவே தங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதாக தெரிவித்தார்.
இந்த சீசன் தொடங்கியபோது, இறுதிப் போட்டியில் விளையாடுவதையே இலக்காக கொண்டு விளையாடியதாகவும், அந்த இலக்கை தற்போது தொட்டுவிட்டதாகவும் கூறிய பேட் கம்மின்ஸ், தங்களது அணியின் பலம் பேட்டிங் என்பதை நன்றாக அறிவோம் என்றும், அதேபோல், புவனேஷ்வர்குமார், நடராஜன், உனத்கட் ஆகியோரை கொண்டிருப்பதும் தங்களது பலம் என்றும் தெரிவித்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் மூவரும் தங்களது பணியை எளிதாக்குவதாகவும், அதேபோல், இம்பேக்ட் பிளேயராக ஷாபாஸ் அகமதுவை கொண்டுவர ஆலோசனை கூறியது பயிற்சியாளர் டேனியல் வெட்டோரிதான் என்றும் கூறினார்.
இதையும் படிக்க:
டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அரையிறுதியில் மோத வாய்ப்பு இல்லை – முன்னாள் வீரர் கணிப்பு
அத்துடன் அபிஷேக் சர்மாவின் பந்துவீச்சும் தங்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்ததாகவும், இரு ஸ்பின்னர்களும் வெற்றியை கொண்டு வந்துவிட்டார்கள் என்றும் கூறிய பாட் கம்மின்ஸ், இந்த சீசனில் தங்களது வெற்றிக்கு 60 முதல் 70 பேர் உழைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இன்னும் ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே தங்களது இலக்கு என்றும், இறுதிப் போட்டி குறித்து பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
