இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதால், ஈரான் அரசியலமைப்புச் சட்டப்படி, புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை 3 பேர் கொண்ட குழு நாட்டை வழிநடத்துகிறது. இந்த தற்காலிக தலைமைக் குழுவில் தற்போதைய அதிபர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian), நீதித்துறைத் தலைவர் கோலம்-ஹொசைன் மொஹ்சேனி (Golam-Hossein Mohseni) மற்றும் மூத்த மதகுருவான அயதுல்லா அலி ரேசா அராஃபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

