
ஓமன் கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோதல் தீவிரமடைந்துள்ளதைக் குறிக்கிறது.
ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் நடைபெறும் கப்பல் தாக்குதல்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மினா சக்ர் நகருக்கு வடமேற்கே பயணித்துக் கொண்டிருந்த கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக அமைப்பு (United Kingdom Maritime Trade Operations) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி, ஈரான் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
ஈரான் தனது எலைட் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மூலம், ஹார்முஸ் நீர்ச்சந்தி (Strait of Hormuz) வழியாக எந்தக் கப்பல்களும் செல்ல அனுமதி இல்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 முதல் 30 சதவீதம் ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
இந்தப் பாதை துண்டிக்கப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
2024ஆம் ஆண்டின் கணக்கின்படி, இந்த நீரிணை வழியாகச் சென்ற 84 சதவீத கச்சா எண்ணெய் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கே சென்றது.
ஓமன் கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோதல் தீவிரமடைந்துள்ளதைக் குறிக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி சுமார் 150-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே நங்கூரமிட்டு காத்திருக்கின்றன.
எண்ணெய் விலை பேரலுக்கு $100 வரை உயர்ந்தால், அது உலகளாவிய பணவீக்கத்தை 0.6-0.7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

