Last Updated:
பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பழைய பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பையில் வாழ்வா சாவா ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா இன்று எதிர்கொள்கிறது.
10வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்று கிளைமாக்ஸை நெருங்கிய நிலையில், இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பலமாக காணப்படுகிறது. கடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் பார்முக்கு திரும்பினர்.
பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பழைய பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மறுபுறம் தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் தோல்வியை தழுவியது.


