அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு பிந்தைய சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததாக செய்திகள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியானாலும், அதை ஈரான் தரப்பு மறுத்தது. எனினும், இஸ்ரேல் ஊடகங்களில் காமேனி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அறிகுறிகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளமான Truth Social-ல் வெளியிட்ட பதிவில், காமேனி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். உலக அமைதிக்காக இது ஒரு முக்கியமான திருப்புமுனை எனவும், ஈரான் மக்களுக்கு தங்கள் நாட்டை மீட்டெடுக்க இது ஒரு வாய்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேலுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டதால் இந்த நடவடிக்கை சாத்தியமானது என்றும், தேவையான வரை தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உலக அமைதியை நிலைநிறுத்துவது தான் நோக்கம் எனவும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.