அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று ஈரானின் பல்வேறு பகுதிகளில் போர் விமானங்கள் மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதலால் ஈரானின் பல நகரங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பெரும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில், ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோரச் சம்பவத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.