• Login
Sunday, March 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: கத்தாரிலுள்ள மலேசியர்களுக்குத் தூதரகம் அவசர எச்சரிக்கை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மத்திய கிழக்கில் போர் பதற்றம்: கத்தாரிலுள்ள மலேசியர்களுக்குத் தூதரகம் அவசர எச்சரிக்கை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தோஹா | பிப்ரவரி 28, 2026 :

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள திடீர் இராணுவ மோதல்களைத் தொடர்ந்து, கத்தாரில் வசிக்கும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய போர்ச் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து, விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மலேசியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்தோடு அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். கத்தார் அரசு மற்றும் மலேசியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும். இதுவரை தூதரகத்தில் பதிவு செய்யாத மலேசியர்கள், e-Consular அகப்பக்கம் வழியாக உடனடியாகப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

தூதரக உதவியைப் பெற விரும்புவோர் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: அவசரகால தொலைபேசி: +974 3374 6733 (அவசர தேவைகளுக்கு மட்டும்), மின்னஞ்சல்: [email protected]

இன்று (பிப்ரவரி 28) அதிகாலை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது “முன்னெச்சரிக்கை தாக்குதல்களை” (Preemptive Strikes) நடத்தியுள்ளன. இதற்குப் பதிலடியாக ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, ஈரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

மலேசியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தோஹா மற்றும் ஜெடா நோக்கிய தங்களின் விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன அல்லது மாற்றுப் பாதையில் இயக்கி வருகின்றன.



Read More

Previous Post

Iran-Israel War News LIVE : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தொடங்கிய ஈரான்… உச்சக்கட்ட பதற்றம் | World News (உலக செய்திகள்)

Next Post

எங்களை அடக்கி ஆளும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் : வேலன் சுவாமிகள் கோரிக்கை

Next Post
எங்களை அடக்கி ஆளும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் : வேலன் சுவாமிகள் கோரிக்கை

எங்களை அடக்கி ஆளும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் : வேலன் சுவாமிகள் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin