Last Updated:
இஸ்ரேல் தலைநகர் டெஹ்ரான் மீது குண்டு மழை பொழிகின்றன இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விமானங்கள்.
ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளன அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக தாக்குவதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. தற்போது ஈரான் தலைநகர் டெஹ்ரனை குறிவைத்து பயங்கர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஈரானின் உயர் தலைவர் காமேனியின் வீடு, அலுவலகம், உளவுத்துறை தலைமை அலுவலம் போன்றவை மீது தாக்குதல் நடந்துள்ளது. காமேனி பாதுகாப்பாக நிலவறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆபரேஷன் லயன்’ஸ் ரோர் என பெயரிட்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்துகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கெனவே போர் பதற்றம் உச்சத்திலுள்ள நடத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதல் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இஸ்ரேல் தலைநகர் டெஹ்ரான் மீது குண்டு மழை பொழிகின்றன இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விமானங்கள்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் மீது பயங்கர தாக்குதலை தொடங்கியிருப்பது, உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் “ஈரானிய ஆட்சி முறையில் இருந்து எழும் உடனடி அச்சுறுத்தலை அகற்றவே இந்த தாக்குதல் நடக்கிறது. ஈரான் அணு ஆயுத வலிமை பெறுவதை அனுமதிக்க மாட்டோம். ஈரானின் ஏவுகணை தொழிற்சாலை முற்றிலும் அழிக்கப்படும். அமெரிக்கா மீதான அவர்களின் அச்சுறுத்தலை முறியடிப்போம்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
“முற்றிலுமாக அழிக்கப்படும்” – இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது குண்டுமழை பொழியும் அமெரிக்கா… ட்ரம்ப் எச்சரிக்கை!


