Last Updated:
“என் வாழ்வில் மிகச்சிறந்த நாட்கள் அது தான்” என 2023 உலக கோப்பை போட்டி குறித்து இந்திய அணி வீரர் முகமது ஷமி நினைவுகூர்ந்துள்ளார்.
“என் வாழ்வில் மிகச்சிறந்த நாட்கள் அது தான்” என 2023 உலக கோப்பை போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி நினைவுகூர்ந்துள்ளார்.
நியூஸ் 18 குழுமத்தின் Rising Bharat உச்சிமாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில், அரசியல், வணிகம், தொழில்நுட்பம், பொருளாதாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அந்த வகையில் இரண்டாவது நாளான இன்று கிரிக்கெட் வீரர்கள் மிதாலி ராஜ், ஷமி மற்றும் யுஸ்வேந்திர சாஹல், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் சர்வம் AI இணை நிறுவனர் பிரத்யுஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முஹம்மது ஷமி கலந்துகொண்டார். அவர் கூறுகையில், “விளையாட்டு போட்டிகளின்போது உள்ளூர் மொழிகளை பயன்படுத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. கிராமத்தில் வசிக்கும் எளிய மக்களுக்கு ஆங்கிலம் புரியாது.
கிராமத்தில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டாக சென்று சேர்ந்திருக்கிறது. ஆனால், ஆங்கில வர்ணனைகளால் அந்த மக்களால் கிரிக்கெட்டை முழுமையாக தங்களுடன் கனெக்ட் செய்ய முடிவதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் விளையாட்டை பார்க்கும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் முன்பை விட அதிகமாக கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள்.
கடந்த 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. என் வாழ்வின் மிகச்சிறந்த நாட்கள் அவை. இந்திய அணியுடன் இணைந்து விளையாடியது என்னுடைய கரியரில் சிறந்த பயணமாக அமைந்தது” என்றார்.


