கோலாலம்பூர் | பிப்ரவரி 28, 2026:
மலேசியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளைக் (Online Scams) கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு தனிநபர் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் (Telco) அதிகபட்சமாக 5 சிம் கார்டுகளை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற புதிய விதியை மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட டெல்கோ நிறுவனத்தில் 5 சிம் கார்டுகள் வரை மட்டுமே வைத்திருக்க முடியும். இதன் மூலம் சிம் கார்டுகளை மொத்தமாக வாங்கி மோசடிகளுக்குப் பயன்படுத்துவது தடுக்கப்படும்.
மேலும் சுற்றுலாப் பயணிகளின் பெயரில் பதிவு செய்யப்படும் சிம் கார்டுகள், 3 மாதங்களுக்குப் பிறகு தானாகவே செயலிழக்கச் செய்யப்படும் (Deactivate) என்று, குற்றவியல் நிபுணர் டாக்டர் சல்மிசி ஹுசின் மற்றும் இணையப் பாதுகாப்பு நிபுணர் ஃபோங் சூங் ஃபூக் ஆகியோர் இம்மாற்றங்கள் குறித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
போலி கணக்குகளை உருவாக்குவதற்கும், OTP எண்களைப் பெறுவதற்கும் சிம் கார்டுகளே முக்கியக் கருவியாக இருப்பதால், இந்தக் கட்டுப்பாடு ஒரு நல்ல தொடக்கம் என டாக்டர் சல்மிசி வரவேற்றுள்ளார்.




