Last Updated:
இனெஸ்ஃபரியா என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கி உள்ள இவர், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சுற்றிப் பார்த்து வருகிறார்.
மும்பையில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். 15 நிமிடங்களுக்கும் மேலாக பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த சம்பவத்தில் நடந்தது என்ன? மும்பை சிட்டியில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை என்ன?
இனெஸ்ஃபரியா என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கி உள்ள இவர், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சுற்றிப் பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று மும்பையின் மஹாலட்சுமி பகுதியில் உணவருந்திவிட்டு வீடியோ எடுத்துக்கொண்டே நடந்து சென்றவரை உள்ளூர் இளைஞர்கள் இருவர் பாலோ செய்ய ஆரம்பித்தனர். 15 நிமிடங்களுக்கும் மேலாக பின்னாலேயே துரத்திக்கொண்டு சென்றவர்கள், ஒரே ஒரு செல்பி எடுக்கலாமா? எனக் கேட்டு எல்லைமீறியுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து சுற்றுலாவரும் பெண் பயணிகளிடம், உள்ளூர் ஆண்கள் எல்லைமீறும் சம்பவம் ஏற்கனவே பல பிரளயங்களை உண்டாக்கி இருந்தநிலையில் இச்சம்பவம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Mumbai,Maharashtra