Last Updated:
உத்தரப்பிரதேசத்தில் ரயில் நிலையத்தில் உள்ள கடையில் உடனடியாக டீ போட்டுக்கொடு என்று ரயில்வே போலீசார் அத்துமீறியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் டீ கொடுக்க தாமதம் செய்த கடை ஊழியரை, ரயில்வே போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி காயப்படுத்தி உள்ளார். சிங்கிள் டீக்காக அடாவடியில் ஈடுபட்ட காவலர் மீது, நடவடிக்கை பாயுமா? ரயில் நிலையத்தில் உள்ள கடையில் உடனடியாக டீ போட்டுக்கொடு என்று ரயில்வே போலீசார் அத்துமீறியுள்ளனர். பொறுமை காக்க கூறிய இளைஞரிடம் பொங்கியெழுந்த காவலர்கள், தங்களது கடமையை மறந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நடந்தது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் கிருஷ்ணா ஃபுட் என்ற கடை அமைந்துள்ளது. எட்டாவது நடைமேடையில் உள்ள அந்த கடையில் இருந்த இளைஞர் வாடிக்கையாளர்களின் வருகை நோக்கி காத்திருந்தார். காலையில் கடையை திறந்ததும் விற்பனை களைகட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தபோது, ரயில்வே காவலர் ஒருவர் அங்கு வந்துள்ளார்.
அவரைப் பார்த்ததும் “காலையிலேயே தொல்லை கொடுக்க வந்துவீட்டீர்களா?” என உள்ளுக்குள் முணுமுணுத்துள்ளார். நேராக கடைக்கு வந்த காவலர், “ஸ்ட்ராங்கா ஒரு டீ போட்டுக்கொடு” என்று அதட்டும் தொணியில் கூறியுள்ளார். அதைக் கேட்டு அலட்டிக் கொள்ளாத இளைஞர், “ரயில் வந்து சென்றதும் போட்டுத் தருகிறேன்” என்று கூலாக தெரிவித்துள்ளார்.
“பயணிகள் வரும் நேரத்தில் உங்களுக்கு டீ போட்டுக் கொண்டிருந்தால் வியாபாரம் பாதிக்கும்” என்று நடைமுறைச் சிக்கலை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். எப்படியும் காசு கிடைக்காது என்பதால் மெதுவாக டீ போட ஆரம்பித்துள்ளார். ஆர்டர் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிய காவலர் சிறிது நேரத்தில் திரும்பி வந்துள்ளார். அப்போது, “இன்னும் நீ டீ போடலையா?” என கோபமாக கேட்டுள்ளார். அதற்கு கடையில் இருந்த இளைஞரும் பதிலுக்கு பதில் பேசியுள்ளார்.
“என்னிடமே சட்டம் பேசுவாயா?” எனக் கூறி, இளைஞரின் கன்னத்தில் பளார் பளார் என காவலர் அறைந்துள்ளார். தொடர்ந்து சட்டையைப் பிடித்து இழுத்துப் போட்டு தாக்கியுள்ளார். அதற்கும் அசராத இளைஞர், தனது ஓனருக்கு கால் செய்ய செல்போனை கையில் எடுத்துள்ளார். உடனே கண்கள் சிவக்க, ரயில்வே போலீசார் செல்போனை பறித்துக் கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இறுதியாக “உன் கடையில் டீயே வேண்டாம்” என்று நொந்து கொண்டுள்ளனர்.
மேலும், சிக்கிள் டீக்காக இளைஞரை தாக்கி அடாவடியில் ஈடுபட்டவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். விவகாரம் பூதகரமானதால் ரயில்வே போலீசார் மீது நடவடிக்கை பாயுமா?
சிங்கிள் டீக்காக போலீசார் அடாவடி… தாமதம் செய்ததால் கொந்தளிப்பு… டீ மாஸ்டர் கன்னத்தில் பளார்… பளார்…

