Last Updated:
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பியூஷ் கோயல், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு பல சாதகங்கள் வழங்கும் என தெரிவித்தார்.
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் இருந்து நமக்கு பல சாதகமான அம்சங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2026 இல் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது; “அமெரிக்காவுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தம் என்பது சிறந்தது. நாம், நமது சிறு, குறு தொழில்கள், மீனவர்கள், விவசாயிகளைக் காத்துள்ளோம். இது ஒரு வளர்ந்து வரும் சூழ்நிலை. டிரம்ப் நிர்வாகம் சில கருத்துக்களைச் தெரிவித்துள்ளது. பல்வேறு உரையாடல்கள் நடந்து வருகின்றன. சூழ்நிலைகள் மாறினால், ஒப்பந்தம் மீண்டும் சமநிலைப்படுத்தப்படும்.
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் இருந்து நமக்கு பல சாதகமான அம்சங்கள் உள்ளன. AI உச்சி மாநாட்டில் சில காங்கிரஸ்காரர்கள், உலகிற்கு இந்தியாவின் சாதனைகள் மற்றும் சலுகைகளை குறைத்து மதிப்பிட முயற்சிப்பதை வலுவான வார்த்தைகளில் கண்டிக்க விரும்புகிறேன். மோசமான தேச விரோத செயல்.
எங்களைப் பொறுத்தவரை, அமெரிக்கா ஒரு முக்கியமான வர்த்தக கூட்டாளி, மூலோபாய மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மை. அமெரிக்க நிர்வாகத்துடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளோம். இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை நாம் காத்திருந்து கவனிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; “அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; இந்தியாவுக்கு பல சாதகங்கள்” – அமைச்சர் பியூஷ் கோயல்


