சென்னை,‘துரந்தர்-2’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிசென்னைர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் துரந்தர்-2 தடை செய்யப்பட்டதால் படத்தை காண ரசிகர்கள் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் துரந்தர் தடை செய்யப்பட்டதால் ரசிகர்கள் இந்தியா வந்து படத்தை பார்த்ததாக நடிகர் மாதவன் தெரிவித்தார். மேலும், இது 2-ம் பாகத்திலும் நடக்கும் எனவும் கூறினார். துரந்தர்-2 ஐ காரணம் காட்டி இந்தியா வரும்போது தங்கள் பிஸினஸ் பணிகளையும் சேர்த்து கவனிக்க ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான முதல் பாகம், பல நாடுகளில் தடைகளை எதிர்கொண்ட போதிலும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது அதன் 2-ம் பாகம் உருவாகி இருக்கிறது. இது அடுத்த மாதம் 19-ம் தேதி திரைக்கு வருகிறது.
The post ‘துரந்தர்-2’காக கடல் தாண்டும் ரசிகர்கள் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.
