• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Arvind Kejiriwal | “பொய் வழக்கு போடப்பட்டுள்ளது..உண்மை வென்றது..” கண்கலங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Arvind Kejiriwal | “பொய் வழக்கு போடப்பட்டுள்ளது..உண்மை வென்றது..” கண்கலங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 27, 2026 11:54 AM IST

Arvind kejiriwal Case | அவர்கள் மீது சிபிஐ சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாகச் சொல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் காரணமாகவே கெஜ்ரிவால் தேர்தல் காலத்தில் பிரச்சாரத்திற்குக் கூட செல்ல முடியாமல் கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மிக நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், முறையான ஆதாரங்கள் இல்லாமல் ஒருவரைச் சதித் திட்டத்தின் மையப்புள்ளி என்று கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. சிபிஐ தனது விசாரணையின் போது சில முக்கிய வாக்குமூலங்கள் மற்றும் கருத்துக்களை ஏன் ஆவணங்களில் சேர்க்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், சவுத் குரூப் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கும் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கான முறையான ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும், அரசுத் தரப்பின் வாதங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகவும் நீதிமன்றம் சாடியது.

மணீஷ் சிசோடியாவை விடுவித்த நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது நிலைக்கவில்லை என்று கூறியது. அரசுத் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பார்க்கும்போது, அவை நிர்வாக ரீதியான ஆலோசனைகளாகத் தெரிகிறதே தவிர, அதில் எந்தவிதமான கிரிமினல் உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மதுபானக் கொள்கை உருவாக்கம் என்பது பல நிலைகளில் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “உண்மை எப்போதும் வெல்லும்” என்று கூறினார். பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகாரம் வேண்டுமென்றால் மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி பெற்றிருக்க வேண்டுமே தவிர, தன்னைச் சிறையில் அடைத்து ஆட்சியைப் பிடிக்க முயன்றிருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார். அப்போது கண்கலங்கிய அவர், தங்களை அச்சுறுத்துவதற்காகவே இந்த பொய் வழக்கு போடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

First Published :

Feb 27, 2026 11:54 AM IST

Read More

Previous Post

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் : வெளியான அறிவிப்பு

Next Post

பிஎம் கிசான் 22-வது தவணை.. விவசாயிகளுக்கு முக்கிய எச்சரிக்கை.. மத்திய அரசு புதிய திட்டம்? | PM Kisan

Next Post
பிஎம் கிசான் 22-வது தவணை.. விவசாயிகளுக்கு முக்கிய எச்சரிக்கை.. மத்திய அரசு புதிய திட்டம்? | PM Kisan

பிஎம் கிசான் 22-வது தவணை.. விவசாயிகளுக்கு முக்கிய எச்சரிக்கை.. மத்திய அரசு புதிய திட்டம்? | PM Kisan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin