• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா – இஸ்ரேல் இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 27, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியா – இஸ்ரேல் இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 27, 2026 7:08 AM IST

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பயணத்தில் நெதன்யாகு, இசாக் ஹோர்சோக் சந்தித்து 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யாத் வஷேம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி - இஸ்ரேல பிரதமர் நெதன்யாகு
பிரதமர் மோடி – இஸ்ரேல பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருதரப்புக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு, தூதரக உறவு உள்ளிட்ட துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்புக்கும் இடையே விரைவில் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இருநாட்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரவு விருந்து அளித்தும் உபசரித்திருந்தார்.

இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று, ஜெருசலேமில் உள்ள யூதர்களின் யாத் வஷேம் நினைவிடத்திற்கு சென்றார். 2ஆம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அந்த நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அந்நாட்டு அதிபர் இசாக் ஹோர்சோக்கையும் சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு, பொருளாதாரம், விண்வெளி, பாதுகாப்பு, விவசாயம், கல்வி, கடல்சார் பாரம்பரியம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் பேசிய நெதன்யாகு, இந்தியாவிற்கும் தனக்குமான பிணைப்பு குறித்து நினைவு கூர்ந்தார். இஸ்ரேலும், இந்தியாவும் புதுமைகளை நோக்கிய பயணத்தில் குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார். தனக்கு அளிக்கப்பட்ட இஸ்ரேலின் உயரிய விருதை இந்திய நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இஸ்ரேலில் யுபிஐ பயன்படுத்த ஒப்பந்தம் போட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இரு தரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு விரைவில் முழு வடிவம் கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதிகூறினார்.

இதனைத் தொடர்ந்து, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை, தனது மனைவியுடன் விமான நிலையத்துக்கே வந்து பெஞ்சமின் நெதன்யாகு வழியனுப்பிவைத்தார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி மாணவர் ஒருவர் படுகாயம்!

Next Post

6 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

Next Post
6 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

6 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin