• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பழங்கள் மீது எலி மருந்தை தடவிய பயங்கரம்… மக்கள் உயிருடன் விளையாடிய வியாபாரி… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 26, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பழங்கள் மீது எலி மருந்தை தடவிய பயங்கரம்… மக்கள் உயிருடன் விளையாடிய வியாபாரி… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 26, 2026 7:54 PM IST

பானிப்பூரி தயாரிப்பதையே பாய்சன் தயாரிப்பதுபோல் பயமுறுத்தும் வடக்குவாழ் சாலையோர வியாபாரிகள், தற்போது பழங்களின் மீது எலி பாய்சனை தடவும் காட்சிகள் வெளியாகி, மும்பை மக்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

Rapid Read
மும்பை பழ வியாபாரி
மும்பை பழ வியாபாரி

மும்பையில் சாலையோரப் பழ வியாபாரிகள், எலிகளிடமிருந்து பழங்களைப் பாதுகாக்க, எலி மருந்தை பழங்களின் மேல் தடவிய சம்பவம் வாடிக்கையாளர்களை வாயடைத்துப் போகச் செய்துள்ளது. மும்பையை அலறவிட்ட பழ வியாபாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

பானிப்பூரி தயாரிப்பதையே பாய்சன் தயாரிப்பதுபோல் பயமுறுத்தும் வடக்குவாழ் சாலையோர வியாபாரிகள், தற்போது பழங்களின் மீது எலி பாய்சனை தடவும் காட்சிகள் வெளியாகி, மும்பை மக்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

அடேய் இது என்னங்கடா லாஜிக்? எலி பாய்சன் தடவுன பழத்தை சாப்பிட்டால் எலி மட்டுமா சாகும்? மனுஷனும் சேர்ந்துதானே சாவான்? என பீதியில் உறைந்துபோய் இருக்கின்றனர் மும்பை மக்கள்.

அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது சார், தைரியமா சாப்பிடுங்க… லேசா நுரை தள்ளும், பார்த்துக்கலாம்… என்கிற ரீதியில் சர்வ சாதாரணமாகப் பதில் கூறும் இந்தப் பழ வியாபாரியை, ஏதோ எமதர்மராஜாவின் அசிஸ்டெண்ட்டைப் போல் அச்சத்துடன் பார்த்துச் செல்கின்றனர் மும்பை வாழ் மக்கள். கஸ்டமர்ஷின் உயிருடன் சோடி போட்டு விளையாடும் இந்தப் பழ வியாபாரி மீது உணவுக் கட்டுப்பாட்டுத்துறை எடுத்த நடவடிக்கை என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரிதான் அந்த சைலன்ட் கில்லர். தன் கடையைச் சுற்றியிருக்கும் எலிகளுக்கெல்லாம் முடிந்தால் வந்து பார் என சவால் விடுத்திருக்கிறார். இத்தனை தைரியம் அவருக்கு வரக் காரணம், அந்த ரேட் கில்லர் எலி மருந்துதான்.

தனது தள்ளுவண்டியில் உள்ள அனைத்துப் பழங்கள் மீதும் அந்த எலி பேஸ்ட்டை எடுத்து மேற்பூச்சாகத் தடவி விட்டிருக்கிறார் அந்தப் பழ வியாபாரி. இதனால், பழங்கள் எல்லாம் பளபளவென காட்சியளிக்க வாடிக்கையாளர்கள் வரிசை கட்டி வர ஆரம்பித்துள்ளனர்.

அடேய்… பழ வியாபாரி, எலியோடு சேர்த்து எங்களையும் பரலோகத்திற்கு பார்சல் செய்ய பார்த்தாயே என பயந்து போய், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் எத்தனை பேர் இந்த வேலையை செய்து வருகிறார்கள் என விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து சாலையோரங்களில் பழம் வாங்கும் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Location :

Mumbai,Maharashtra

Read More

Previous Post

16 மாணவர்களுக்கு ஒவ்வாமை

Next Post

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி விதிப்பு குறித்துப அச்சப்பட வேண்டாம் – மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு – Malaysiakini

Next Post

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி விதிப்பு குறித்துப அச்சப்பட வேண்டாம் – மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin