Last Updated:
தற்போதைய சூழலில் நெட் ரன் ரேட் பிரச்னை இனி இந்தியாவுக்கு இல்லை.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்த நிலையில், அவற்றை இன்றைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி எளிதாக்கியுள்ளது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. குரூப் 1 இல் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது.
மறுபுறம், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால், அந்த அணியின் ரன் ரேட் பிளஸ் 5 புள்ளிகளை தாண்டியிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மேட்ச்சில் வெஸ்ட் இண்டீசை தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் தற்போது குரூப் 1 பிரிவில் முதலிடத்தில் தென்னாப்பிரிக்கா, 2ஆம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ், 3 ஆம் இடத்தில் இந்திய அணி மற்றும் 4 ஆம் இடத்தில் ஜிம்பாப்வே ஆகியவை உள்ளன.
தென்னாப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்சுககு பின்னர் வெஸ்ட் இண்டீசின் நெட் ரன் ரேட் +1.791 என்று மாறியுள்ளது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணிக்கு மிக கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கும்.
ஆனால் வெஸ்ட் இண்டீசை வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா இந்திய அணிக்கு மறைமுகமாக மிகப்பெறும் உதவியை செய்துள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


