Last Updated:
Aircel Maxis வழக்கில் ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Aircel Maxis வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு தொடர தேவையான Prosecution Sanction Order பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், மத்திய அமைச்சராக இருந்தபோது, Aircel Maxis ஒப்பந்தத்தில் ரூ. 600 கோடி எனும் உச்சவரம்பை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் கையில் எடுத்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு Aircel Maxis ஒப்பந்தத்தில், ரூ. 600 கோடி வரம்பை மீறிய முதலீட்டுக்கு தவறான அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு விசாரணையில், சட்டவிரோதமாக ரூ. 1.16 கோடி பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், Aircel Maxis வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு தொடர தேவையான அனுமதியை பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த அனுமதியை கடந்த 10 ஆம் தேதி பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வழக்கு தொடர்வதற்கான அந்த ஆணையை டெல்லி ரௌஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


