நாட்டில் தற்போதுள்ள நிலைக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதி பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைப்பதே பொருத்தமானதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டை பொருளாதார ரீதியில் உறுதியான நிலையில் மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மேற்கொண்டு வரும் வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு இது பொருத்தமானது என்றும் அவர் கூறினார். சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலும் ஐந்து வருடங்களுக்கு நாட்டின் நிர்வாக பொறுப்பை வழங்குவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மேலும் கூறினார்.
The post 05 வருடங்களுக்கு ரணிலிடம் நாட்டை ஒப்படைப்பதே பொருத்தம் appeared first on Thinakaran.

