• Login
Wednesday, February 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

“தி கேரளா ஸ்டோரி 2” படத்தின் டிரெய்லரை நீக்க ஐகோர்ட் உத்தரவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 25, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த 2023ம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம். கேரளாவைச் சேர்ந்த மூன்று நர்சிங் மாணவிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்தை இப்படம் கொண்டிருந்தது. இது வெளியான சமயத்தில் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும் வசூல்ரீதியாக வெற்றிப்பெற்றது.

இதன் முதல்பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. ‘கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரை வெளியாகி தற்போது பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது. டிரெய்லரில் இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கேரள ஐகோர்ட்டில் படத்தின் தணிக்கை சான்றிதழ் ரத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று இந்த வழக்குகளை விசாரித்த கேரள ஐகோர்ட், படத்தை நாளை பார்ப்பதாக கூறியுள்ளது. படத்தின் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனுக்களை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், நீதிமன்றங்கள் பொதுவாக கலை வெளிப்பாட்டில் தலையிடத் தயங்கினாலும், கேரள மக்களின் கவலைகளை “புறக்கணிக்க முடியாது”, ஏனெனில் படத்தின் தலைப்பில் மாநிலத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

விசாரணையின்போது பேசிய அவர், “கேரளா முழுமையான நல்லிணக்கத்துடன் வாழ்கிறது. ஆனால் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கேரளா முழுவதும் நடப்பதாக நீங்கள் சித்தரித்துள்ளீர்கள். இது தவறான ஒரு தகவலை கொடுப்பதுடன், மக்களிடையே உணர்ச்சிகளைத் தூண்டவும் கூடும். இங்குதான் தணிக்கை வாரியம் தனது பணியைச் செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் இதைக் கருத்தில் கொண்டீர்களா?” பொதுவாக, நான் எந்தப் படத்திலும் தலையிடுவதில்லை. கலை சுதந்திரம். ஆனால், அது உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, கேரளா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள், இது சில வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும். நான் நாளை படத்தைப் பார்ப்பேன். நாளை படத்தின் திரையிடலை நீங்கள் ஏற்பாடு செய்யலாம்.” என தெரிவித்தார்.

முன்னதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் எந்த மதத்தையோ அல்லது பிரிவையோ பாதிக்கும் எந்த பகுதியும் இல்லை என்றும், படம் எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைக்கவில்லை என்றும் வாதிட்டார். இதனைத்தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில், இந்தத் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட இளம் பெண்கள் குழுவை ‘லவ் ஜிகாத்தின் பலியானவர்கள்’ என்ற அடையாளத்துடன் முன்னிறுத்துவதாகவும், ஆனால் கதையில் கேரளாவைச் சேர்ந்தவர் இல்லை என்றும் காட்டப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட வாதிட்டனர். நிலைமை இப்படி இருந்தும், இப்படத்திற்கு ‘தி கேரளா ஸ்டோரி 2’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது கேரளச் சமூகத்தை மோசமான முறையில் சித்தரிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து திரையிடல் நேரம் மற்றும் இடம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இருந்து படத்தின் டிரெய்லர் மற்றும் டீசரை நீக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



Read More

Previous Post

யாழில் கோடி ரூபாய் செலவில் அநுரவின் மாநாடு…! ஊழல் ஒழிப்பு கொள்கைக்கு விழுந்த பலத்த அடி

Next Post

80 சதவீத விசாரணைகள் நிறைவு

Next Post
80 சதவீத விசாரணைகள் நிறைவு

80 சதவீத விசாரணைகள் நிறைவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin