யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற “முழு நாடுமே ஒன்றாய்” போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டிற்காக, ஒரு கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான அரச நிதி செலவிடப்பட்டுள்ளமை தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக, ஊழல் ஒழிப்பைத் தனது பிரதான கொள்கையாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் ஒரு நாள் நிகழ்விற்காக இவ்வளவு பிரம்மாண்டமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது முரணான செயல் எனப் பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மண்டப வாடகைக்கு 51 இலட்சம் மற்றும் உணவிற்காக 31 இலட்சம் என வெளியான தகவல்கள், எளிமையான ஆட்சி என்ற வாக்குறுதிக்கு மாறாக அமைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
போதைப்பொருள் ஒழிப்பு எனும் உன்னத நோக்கத்தை விட அதற்காகச் செலவிடப்பட்ட மலைக்கவைக்கும் தொகையே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளமை, அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையில் கேள்விகளை எழுப்பியுள்ளதாகக் கருதப்படுகின்றது.
இந்தச் செலவினங்கள் குறித்த வெளிப்படையான தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தேவையற்ற வீண் விரயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்த மேலதிக தகவல்களை விரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
