அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி ஆல்பானீஸின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து அங்கிருந்து பிரதமர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருகையில், பிரதமர் கான்பராவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்
இந்தநிலையில், அந்நாட்டு நேரப்படி மாலை ஆறு மணிக்குப் பிரதமர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் பிரதமரைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து வீட்டில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சோதனையில் சந்தேகப்படும்படியான எந்தப் பொருளும் கிடைக்கவில்லை எனவும், இதனையடுத்து மிரட்டல் போலி எனவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பிரதமர் வீடு திரும்பியுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இந்தநிலையில், பிரதமர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சோதனையில் எதுவும் சிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர்கள், அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சமீப நாட்களாகப் பிரதமர் மட்டுமன்றி, பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மிரட்டல் வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், எந்த வகையில் மிரட்டல் வந்துள்ளது என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

