Last Updated:
IIT கஞ்சிகோட்டில் அஸ்வினி மீது மர்ம நபர் இரும்புப் பொருளால் தாக்குதல், போலீசார் விசாரணை, மாணவர்கள் போராட்டம், நிர்வாகம் சமாதானம்.
கேரளாவில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவி மீது மர்ம நபர் இரும்புப் பொருளால் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிகோட்டில் உள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் சேலத்தை சேர்ந்த அஸ்வினி என்ற மாணவி டேட்டா சயின்ஸ் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு, மாணவி அஸ்வினி தனது நண்பர்களுடன் கல்லூரியில் உள்ள உணவு அறைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாணவியை இரும்பு பொருளால் தாக்கினார்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த மாணவி, மயக்கம் அடைந்த நிலையில் , சக மாணவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் IIT உயர்கல்வி நிலைய வளாகத்தில் அடையாளம் தெரியாத நபரால் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாலக்காடு கசாபா காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவி மீதான தாக்குதலைக் கண்டித்து ஐஐடி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சக மாணவர்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் சமாதானம் செய்தநிலையில் போராட்டத்தை கைவிட்டனர்.


