Last Updated:
அண்மையில் கிரீன்லாந்து அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்நாட்டு வீரரை தாங்கள் மீட்டதாக டென்மார்க் கடற்படை தெரிவித்திருந்தது.
கிரீன்லாந்துக்கு பிரமாண்ட மருத்துவக் கப்பல் அனுப்பப்படும் என டிரம்ப் அறிவித்த நிலையில், நோ தேங்ஸ் என டென்மார்க் பிரதமர் ஜென்ஸ் பிரெட்ரிக் நீல்சன் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவான கிரீன்லாந்தின் மீது உலகப் போருக்கு முந்தைய காலத்தில் இருந்தே அமெரிக்கா ஒரு கண் வைத்துள்ளது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றபின் பலவந்தமாகவோ, பணம் கொடுத்தோ அந்த மிகப் பெரிய தீவை கையகப்படுத்த டிரம்ப் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார். ஆனால் டென்மார்க் அரசும், கிரீன்லாந்து மக்களும் அதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எனினும் டிரம்ப்பும் எப்படி, எப்படியோ முயன்று வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட பிரமாண்ட மருத்துவக் கப்பலான மெர்சி, கிரீன்லாந்துக்கு செல்வதாகவும், அதில் மக்கள் இலவசமாக மருத்துவம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிரீன்லாந்து அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்நாட்டு வீரரை தாங்கள் மீட்டதாக டென்மார்க் கடற்படை தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடியாக டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்நாட்டு பிரதமர் நீல்சன், தங்கள் சுகாதாரத் துறை நல்ல கட்டமைப்புடன் இருப்பதாகவும், மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படுவதாகவும் டிரம்புக்கு பதிலடி தந்துள்ளார்.
பிரமாண்ட மருத்துவக் கப்பல் அனுப்பப்படும் என அறிவித்த டிரம்ப்… ‘நோ தேங்ஸ்’ சொன்ன கிரீன்லாந்து..!


