யாழ்ப்பாணத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் – ஊரெழு பகுதியைச் சேர்ந்த வயித்திலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாடியிலிருந்து இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்து அவர் மயக்கமடைந்துள்ளார்.
மரண விசாரணை
இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

