குவந்தான்:
ஐந்து ஆண்டுகளுக்கு முன், தனது கணவர் மற்றும் மாமியாரை புண்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு விஷம் கொடுத்ததாக, போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவிக்கு எதிராக நேற்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
Datuk Mou Ei Leen @ Eileen Mou, 42, என்ற சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டு, நேற்று வெள்ளிக்கிழமை (மே 24) நீதிபதி அஸ்மான் முஸ்தபா முன்நிலையில் வாசிக்கப்பட்டது, ஆனால் அம்மாது தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரினார்.
2019 ஜூலையில், லோரோங் ஸ்ரீ குவந்தான் 23 இலக்க வீட்டில் தனது கணவருக்கு விஷம் கொடுத்ததாகவும், ஜூன் 2020 இல் லோரோங் ஸ்ரீ குவந்தான் 59 இல் உள்ள ஒரு வீட்டில் அவரது மாமியாருக்கு விஷம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இரண்டு குற்றங்களும் தண்டனைச் சட்டம் பிரிவு 328ன் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் ஒரு தனிநபர் பிணையுடன் RM6,000 ஜாமீன் வழங்கியது . மேலும் அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், சாட்சிகளை மிரட்ட வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டது.


