
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ள நடப்புச் சம்பியன்களான இந்தியாவுக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

