புதிய முறையின்படி, வாகன விற்பனையாளர்களே வாடிக்கையாளர்களிடமிருந்து தேவையான ஆவணங்களை பெற்று, மத்திய அரசின் ‘Vaahan’ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். பதிவு கட்டணம் மற்றும் சாலை வரி இணையம் வழியாக செலுத்தப்பட்டவுடன், பதிவு சான்றிதழ் தானாக உருவாகிறது. இதனால் அலுவலக வருகை, நீண்ட வரிசை போன்ற சிரமங்கள் தவிர்க்கப்படுகின்றன.


