Last Updated:
அமெரிக்கா – ரஷ்யா இடையிலான சர்வதேச கடல் எல்லை பகுதியில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் இரண்டு போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பி சோதனை செய்துள்ளது.
ஆர்க்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா – ரஷ்யா இடையிலான சர்வதேச கடல் எல்லையான பெரிங் கடல் பகுதியில் ரஷ்யாவிற்கு சொந்தமான இரண்டு Tu-95MS போர் விமானங்கள் தொடர்ந்து 14 மணி நேரத்திற்கு மேலாக பறந்தன.
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இந்த இரண்டு விமானங்களை சுகோய் ரக இரண்டு விமானங்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாகவும், அப்போது நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பி சோதனை செய்ததாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. இவற்றை வெளிநாட்டு போர் விமானம் ஒன்று கண்காணித்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
அதேநேரம், அலாஸ்கா வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் பறந்த ஐந்து ரஷ்ய விமானங்களை கண்டறிந்து அவற்றை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றியதாக அமெரிக்கா கூறியுள்ளது. ரஷ்ய விமானங்கள் அமெரிக்கா அல்லது கனடாவின் வான்வெளிக்குள் நுழையவில்லை என்றும் அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.


