
கல்கிஸை வில்லியம் பிளேஸ் பகுதியில் 110 கிராம் ‘ஐஸ்’ எனப்படும் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் ரத்மலானையைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

