Last Updated:
இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றன. இதில் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் அந்த இடத்தில் ஜிம்பாப்வே இணைந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 போட்டிகளுக்கு குழுக்கள் பிரிக்கப்பட்டதால் சிறப்பாக விளையாடிய அணிகளின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சூப்பர் 8 போட்டிகள் தொடங்கி உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் போட்டிகளில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளும், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன. இந்தியா, இலங்கை நாடுகளில் போட்டிகளில் நடைபெறுவதால் சூப்பர் 8 போட்டிகளுக்கான அணிகள் ஐசிசி தரவரிசைப்படி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டன.
அதன்படி சூப்பர் 8க்கான முதலாவது குழுவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடம்பெற்றிருந்தன. இரண்டாவது குழுவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றன. இதில் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் அந்த இடத்தில் ஜிம்பாப்வே இணைந்துள்ளது.
லீக் சுற்று முடிவுகளின் அடிப்படையில் அல்லாமல், ஏற்கனவே முன்முடிவு செய்யப்பட்ட அட்டவணைபடியே சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. அதாவது அந்தந்த குழுவில் இடம்பெற்றுள்ள அணிகள் அவர்களுக்குள்ளாகவே மோதுகின்றன. இதனால், முதல் சுற்று போட்டிகளில் முதலிடம் பிடித்த 4 அணிகள் முதலாவது குழுவிலும் இரண்டாம் இடம் பிடித்த அணிகள் இரண்டாவது குழுவிலும் இடம்பெற்றுள்ளன.
இதனால், தோல்வியையே தழுவாமல் முதலாவது குழுவில் இடம்பெற்று இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 2ஆவது இடம் பிடித்த அணிகளில் இரண்டு எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளன. எனவே சிறப்பாக விளையாடியதற்கு இது தண்டனைய என ஐசிசியின் நடவடிக்கையை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


