மருத்துவமனைகளில் நடக்கும் பல விநோத சம்பவங்களை நாம் கேள்விபட்டிருப்போம். உடல் உறுப்பு திருட்டு முதல் குழந்தைகள் திருட்டு வரை அனைத்துமே மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜப்பானின் ஒரு மருத்துவமனையில் நடந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பானின் கியூஷு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர், அவரது வித்யாசமான நடவடிக்கையால் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதாவது மருத்துவமனையில் இருந்த பற்களை விற்று பணக்காரராக மாறியுள்ளார். 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக திருடி வந்தவர் தற்போது சிக்கியது எப்படி . வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
கியூஷு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த நபர், மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்று வந்துள்ளார். அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் எளிதாக அனைத்து அறைக்குள்ளும் சென்று வரும் வசதி அவருக்கு இருந்தது. ஒரு அறையில் நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறுசுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பற்களை கடந்த 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் திருடி விற்று பணம் சம்பாதித்துள்ளார்.
இதையும் படிக்க:
மீண்டும் ரஷ்ய அதிபரனார் புதின்… 5வது முறையாக இன்று பதவியேற்பு!
இதன் மூலம் 10 ஆண்டுகளில் அவர் பணக்காரராகவும் மாறியுள்ளார். இதிலிருந்து அவர் சுமார் 30 மில்லியன் யென் சம்பாதித்திள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் 1 கோடியே 63 லட்சம் ரூபாயாகும்.
சிக்கியது எப்படி?
10 ஆண்டுகளாக திருடியவர் மாட்டியது எப்படி என்றால் பழைய பற்களை மட்டும் திருடி வந்தவருக்கு பேராசை ஏற்பட்டு புதிய பற்களை திருடி விற்றுள்ளார். பற்கள் காணாமல் போவதை கண்டறிந்த மருத்துவமனை நிர்வாகம் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளது. அதனுடன் கடந்த 10 ஆண்டுகளாகவே அவர் செய்து வரும் திருட்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிக்கிய மருத்துவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் அரிய உலோகமான தங்கம், பல்லேடியம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுவதால் இந்த செயற்கை பற்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. இவற்றில் 40% முதல் 50% வெள்ளி, 12% தங்கம் மற்றும் 20% பல்லேடியம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
