Last Updated:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோல் பங்கில் சிகரெட் பற்ற வைக்க முயன்ற இளைஞர், பெட்ரோல் பங்க்கையே பற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கரில் பெட்ரோல் பங்கில் சிகரெட்டை பற்ற வைக்க முயன்ற இளைஞர், பங்க்கை கொளுத்திவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்கில் சிகரெட் பிடிக்கக்கூடாதா? என்ற மிதப்பில் ஆபத்தை உணராமல் செய்த செயல் சம்பவமானதன் பின்னணி என்ன? பெட்ரோல் பங்கில் சிகரெட் பற்ற வைக்க முயன்ற இளைஞர், பெட்ரோல் பங்க்கையே பற்ற வைத்த சம்பவத்தில் நடந்தது என்ன? அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே… என இப்படி அட்டூழியத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறை புகட்டிய பாடம் என்ன?
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள உர்லா பகுதியில், பங்கில் பெட்ரோல் நிரப்ப வந்த இரு இளைஞர்களில், தர்மேந்திரா என்பவர் பைக்கில் இருந்து கீழே இறங்கி சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துள்ளார். தனது நண்பர் பைக் டேங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கும்போது லைட்டரை திருகி சிகரெட்டை பற்ற வைக்க முயன்றுள்ளார்.
அதைப் பார்த்த அவரது நண்பர் இம்ரான், பெட்ரோல் பங்கில் புகைப்பிடிப்பதை நிறுத்தச் சொன்னபோது, அதில் கோபமடைந்த தர்மேந்திரா, லைட்டர் தீயை பம்ப் ஓசில் வைத்து வில்லங்கத்தை இழுத்து விட்டுள்ளார். அவ்வளவுதான்… ஜோலி முடிந்தது! சட்டென பரவிய தீ, பெட்ரோல் பம்ப் மெஷின் மற்றும் பைக்கின் டேங்க் என ஒரு காட்டு காட்டியது. ஒரு வழியாக பங்க் ஊழியர் தீயை போராடி அணைத்தார்.
மதி மயக்கத்தில், ஆபத்தை உணராமல் மற்றவர்களின் உயிருடன் விளையாடினால், சம்பந்தப்பட்ட குற்றவாளி காயப்பட்டாலும் சட்டம் கருணை பார்க்காது; கடந்தும் போகாது….

