கோலாலம்பூர்:
பெர்சத்து கட்சியின் சுபாங் மற்றும் பாசிர் சாலாக் பிரிவு கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் மீதான நம்பிக்கை இழப்பே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
சுபாங் பிரிவின் செயலாளர் வான் அகமது சுக்ரி விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் உயர்மட்டத் தலைமை அடிமட்டத் தொண்டர்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப செயல்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரிவுத் தலைவர் அஷ்ரப் ஹாலிம், துணைத் தலைவர் முகமட் ஷாரில் ஹாஷிம், செயலாளர் வான் அகமது சுக்ரி மற்றும் பல முக்கிய பொறுப்பாளர்கள் பதவி விபகியுள்ளனர்.
கொள்கை மற்றும் நேர்மை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பாசிர் சாலாக் பிரிவின் செயல் துணைத் தலைவர் முகமட் ஜாஹித் அமான் நௌரி இந்த விலகல் முடிவை அறிவித்தார். நேற்றைய சிறப்பு கூட்டத்திற்குப் பிறகு இந்தப் பிரிவு அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டத்தில் துணைத் தலைவர் முகமட் ஜைனல் அபிடின் சைனி, செயலாளர் அப்துல் மனாஃப் சாவுட் மற்றும் பல கமிட்டி உறுப்பினர்கள்.
டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாததே இந்த ஒட்டுமொத்த விலகலுக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
The post பெர்சத்து கட்சியில் இருந்து சுபாங் மற்றும் பாசிர் சாலாக் கமிட்டி உறுப்பினர்கள் விலகல் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

