• Login
Friday, February 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இத்தாலியப் பிரதமருக்குப் பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை…! வெடித்த சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
February 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இத்தாலியப் பிரதமருக்குப் பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை…! வெடித்த சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடுமையாக எச்சரித்துள்ளார்.



இந்தநிலையில், மெலோனியைப் பிரான்சிற்கு வர வேண்டாம் என்றும் அவர் தனது வீட்டிலேயே இருப்பது நல்லது என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பிரான்ஸ் மற்றும் இத்தாலி எல்லைப் பகுதியில் குடியேறியவர்களுக்கு உதவி செய்து வந்த பிரபல சமூக ஆர்வலர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்துள்ளது.

மர்மமான முறை



மேலும் தெரியவருகையில், சமீபத்தில் பிரான்ஸ் நாட்டுச் சமூக ஆர்வலர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.


இந்தப் படுகொலை குறித்துக் கருத்து தெரிவித்த மெலோனி, பிரான்ஸ் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதையே இது காட்டுகிறது என விமர்சித்திருந்தார்.

இத்தாலியப் பிரதமருக்குப் பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை...! வெடித்த சர்ச்சை | Macron Meloni Row France Italy Tension 2026

அத்தோடு, பிரான்சின் தாராளவாதக் கொள்கைகளே இத்தகைய வன்முறைகளுக்குக் காரணம் என்றும் அவர் மறைமுகமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.



இந்தநிலையில், மெலோனியின் இந்தக் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் மக்ரோன் கருத்து தெரிவித்துள்ளார்.



மேலும் தெரிவித்த அவர், “மற்றொரு நாட்டின் உள்நாட்டுத் துயரத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது தரமற்ற செயல்.

பழைய மோதல்

பிரான்சிற்கு வந்து எங்களுக்குப் பாடம் எடுக்க மெலோனிக்கு எந்தத் தகுதியும் இல்லை.

அவர் பாரிஸுக்கு வருவதைவிட, இத்தாலியிலேயே (வீட்டிலேயே) தங்கியிருப்பது அனைவருக்கும் நல்லது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியப் பிரதமருக்குப் பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை...! வெடித்த சர்ச்சை | Macron Meloni Row France Italy Tension 2026


கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் குடியேறிகளுக்கு (Migrants) ஆதரவாகச் செயல்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


குடியேறிகள் விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக வெவ்வேறு துருவங்களில் நின்று மோதி வருகின்றன.



இதனடிப்படையில், இந்தச் சமூக ஆர்வலரின் மரணம் அந்தப் பழைய மோதலை மீண்டும் கிளப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியா வருகை | Makkal Osai

Next Post

கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்பை வலுப்படுத்த மீன்பிடிச் சட்டத்தில் மாற்றங்கள் – Malaysiakini

Next Post
கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்பை வலுப்படுத்த மீன்பிடிச் சட்டத்தில் மாற்றங்கள் – Malaysiakini

கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்பை வலுப்படுத்த மீன்பிடிச் சட்டத்தில் மாற்றங்கள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin