Last Updated:
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டில் ஏஐ தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிகப்படியான முதலீடுகள் கிடைத்துள்ளன.
பொதுவான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கிடைக்கும் முதலீடுகளைவிட கடந்த ஆண்டு ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகப்படியான முதலீட்டை பெற்றுள்ளன. தரவுகளின்படி 2021ஆம் ஆண்டில் பொதுவான தொழில்களுக்கு 55 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு கிடைத்தது, அப்போது ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 8 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே முதலீடு கிடைத்தது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏஐ நிறுவனங்களுக்கான முதலீடுகள் குறைந்த போதிலும், 2024ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாயும், மற்ற நிறுவனங்களுக்கு 19 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாயும் முதலீடாக கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கடந்தாண்டு 50 சதவீதம் முதலீடு ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது.
அதன்படி ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 18 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாயும், மற்ற நிறுவனங்களுக்கு 18 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயும் முதலீடாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Feb 20, 2026 10:22 PM IST


