வடக்கு அரசியல் வட்டாரங்களில், “தேர்தல் முன் டிரைலரா? அல்லது ரியல் கிளைமாக்ஸா?” என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு கட்சிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.
மேடைகளுக்கு மேடை கூட்டணி கலக்கத்தில் கருத்துரைத்துக்கொண்டிருக்கும் கட்சிகளின் போக்கு இந்த அரசியல் கேள்விகளை மக்களிடத்தில் எழுப்பியிருக்க கூடும்.
வெளியே நிலைப்பாடுகளை மாற்றி வைத்துவிட்டு, யார் யாருடன் கை கோர்க்கப் போகிறார்கள் என்ற இரகசிய கலந்துரையாடல்கள் காலத்தின் கட்டாயம் என்ற ரீதியிலும் நடப்பதாக சில தகவல்கள் கசிகின்றன.
இது பாரம்பரிய தமிழ்தேசிய கட்சிகளின் பழைய நண்பர்கள் திரும்ப வரலாம் என்ற சைகையையும் மெதுவாக காட்டுகிறதாம்.
மற்றுமொரு கட்சியின் பக்கம் சிலர் சின்ன சிரிப்போடு புதிய கூட்டணி தான் எதிர்காலம் என்று சொல்லிக்கிட்டிருக்கிறார்களாம்.
மொத்தத்தில் கூட்டணி கதைகளுக்கு இன்னும் முடிவே இல்லை. அடுத்த வாரம் யார் யாருடன் சேர்கிறார்கள் என்பதே பெரிய எதிர்பார்பாக மாறியிவட்டது…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

