இந்திய பிரதமரை நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த இருதரப்பு சந்திப்பானது இன்று (20) நடைபெற்றுள்ளது.
டில்லியில் இடம்பெறும் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்தின் நன்மைக்காகப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்கில், அரச தலைவர்கள் மற்றும் உலகின் தொழில்நுட்பத் துறையின் பிரதானிகளின் பங்கேற்புடன் புதுடெல்லியில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi holds a bilateral meeting with Sri Lankan President Anura Kumara Disanayaka
(Source: DD) pic.twitter.com/9Vkmac4ku9
— ANI (@ANI) February 20, 2026
ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்லோவாக்கியா ஜனாதிபதி பீட்டர் பெலக்ரினி, நெதர்லாந்து பிரதமர் டிக் ஷூஃப் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
மேலும் சுவிஸ்லாந்து ஜனாதிபதி கை பர்மெல், கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

