லண்டன்,இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் விண்ட்சரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்திலும் இவரது பெயர் அடிபட்டது. ஆனால் அதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என அவர் மறுத்து இருந்தார்.
மறைந்த இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் 3-வது மகன் ஆவார். எப்ஸ்டீன் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டதும், ஆண்ட்ரு அரண்மனையை விட்டு வெளியேறிவிட்டார்.
இந்தநிலையில், பதவியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இளவரசர் பட்டத்தை அவர் துறந்துள்ளார். முன்னாள் இளவரசர் ஒருவர் கைது செய்யப்படுவது இங்கிலாந்து வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இன்று அவர் 66 வது பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் பாலியல் கடந்த குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த இங்கிலாந்து அரசர் சார்லசின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் அந்நாட்டு போலீசாரால் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேம்ஸ் வேலி போலீசார் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில், சட்ட விதிமுறைகளின்படி இளவரசரின் பெயரை அவர்கள் வெளியிடவில்லை.
வர்த்தக தூதராக இருந்தபோது ரகசிய தகவல்களை எப்ஸ்டீனுக்கு கசியவிட்டது மற்றும் எப்ஸ்டீன் மூலமாக பெண்களை கடத்திய விவகாரங்களில் தொடர்பு இருப்பதாக வெளியான ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The post எப்ஸ்டீன் விவகாரம்: இங்கிலாந்து அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ கைது appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

