கடந்த 13ஆம் திகதியன்று ஹோமாகம, மாகம்மன, சமகி மாவத்தையில் இரண்டு வயதுடைய சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் புதன்கிழமை (18) அன்று கைது செய்யப்பட்டதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹோமாகம, பிட்டிபன தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு பலத்த அடிமையான சந்தேக நபர், வாடகைக்கு முச்சக்கர வண்டி செலுத்துபவர் என்பதுடன், சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் மஹரகம பகுதியில் உள்ள அழகு கலை நிலையம் ஒன்றில் வைத்து சிறுமியின் தாயை அடையாளம் கண்டுள்ளார்.
சிறுமியின் தாய் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
