Last Updated:
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆப்கன் அணி 200 ரன்கள் குவித்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கனடா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் 39 ஆவது லீக் போட்டியாக கனடா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மேட்ச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.
தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். செதிகுல்லா அதல் 44 ரன்களும், அஸ்மதுல்லா ஒமர்சாய் 13 ரன்களும் எடுத்தனர். இப்ராகிம் சத்ரான் 56 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 95 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆப்கன் அணி 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி கனடா அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
ஆப்கன் அணியின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் கனடா அணி ரன்கள் சேர்க்க திணறியது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்ஷ் தாக்கர் 30 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர்கள் யுவராஜ் சாம்ரா 17 ரன்களும், கேப்டன் தில்ப்ரீத் பாஜ்வா 13 ரன்களும் எடுத்தனர்.
Feb 19, 2026 11:33 PM IST


