Last Updated:
இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்று, ஏவுகணை ஏவும் வாகனத்தை அவரே ஓட்டிச் சென்று அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
தனது ஏவுகணை பலத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், வடகொரியா பிரம்மாண்ட விழாவொன்றை நடத்தியுள்ளது.
வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் 9-ஆவது மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அந்நாட்டின் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை தயாரித்த அதிநவீன ஏவுகணை ஏவும் வாகனங்கள், தொழிலாளர் கட்சிக்கு பரிசாக வழங்கப்பட்டன. இந்த விழாவில் 60 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட 50 நவீன ஏவுகணைகளுடன் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.

இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்று, ஏவுகணை ஏவும் வாகனத்தை அவரே ஓட்டிச் சென்று அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். ஏவுகணைகளை தயாரித்த தொழிலாளர்களுக்கு கிம் ஜாங் உன் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். மேலும் ஒரு தொழிலாளரை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். விழாவில் உரையாற்றிய கிம் ஜாங் உன், இவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு இணையானவை என்றார். இதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக கிம் ஜாங் உன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.


