ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம் 2025 இன் கீழ், பான் கார்டு பயன்பாடு, சொத்து வாங்குதல், பங்குச் சந்தை மற்றும் காப்பீடு ஆகிய துறைகளில் புதிய விதிகள் செயல்படுத்தப்படும். இந்த மாற்றங்கள் சாமானிய மக்களிடம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் வரி செலுத்துவோருக்கு சில சலுகைகளை வழங்குவதோடு, சிலவற்றில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.


