• Login
Thursday, February 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பிரதமர் மோடி- பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

GenevaTimes by GenevaTimes
February 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பிரதமர் மோடி- பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்த்தை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


மும்பையில் உள்ள லோக் பவனில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பிரான்ஸ் தூதுக்குழுவினரும் இந்திய தரப்பில் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பின்னர், கர்நாடகாவின் வேமகலில் டாடா ஏர்பஸ் தொழிற்சாலையில் எச்125 என்ற எடை குறைந்த ஹெலிக்கொப்டர் தயாரிப்பை கூட்டாக தொடங்கிவைத்தனர்.


பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி,


எனது அன்பு நண்பர் ஜனாதிபதி மேக்ரானை மும்பையில் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டிற்கு அவர் என்னை அழைத்தார்.


பிரான்சின் துறைமுக நகரமான மார்சேய்-ல் நாங்கள் சந்தித்தோம். இந்த முறை, ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள அவரை, இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்கும் மும்பையில் அவரை வரவேற்கும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றுள்ளேன்.


இந்தியா – பிரான்ஸ் புதுமை ஆண்டை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதன் மூலம், எங்கள் மூலோபாய கூட்டாண்மையை மக்கள் கூட்டாண்மையாக நாங்கள் மாற்றி உள்ளோம். ஏனெனில், புதுமை தனிமையில் நிகழாது, ஒத்துழைப்பு மூலம்தான் நிகழ்கிறது. எனவே, இந்தியா – பிரான்ஸ் புதுமை ஆண்டில் எங்கள் குறிக்கோள், மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதாகும்.


பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என அனைத்து துறையிலும் நாங்கள் புதுமையை இணைப்போம். ஸ்டார்ட்அப் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இடையே வலுவான நெட்வொர்க்குகளை நாங்கள் உருவாக்குவோம். மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே பரிமாற்றத்தை எளிதாக்குவோம். கூட்டு கண்டுபிடிப்புக்கான புதிய மையங்களை நிறுவுவோம்.


முக்கிய கனிமங்கள், உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை இன்று வலுப்படுத்துகிறோம். சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவுக்கான இந்திய – பிரான்ஸ் மையத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். மேலும், விமானவியல் துறையில் திறன் வளர்ப்புக்கான இந்திய – பிரான்ஸ் மையத்தையும் நாங்கள் தொடங்குகிறோம். இவை வெறும் நிறுவனங்கள் மட்டுமல்ல, எதிர்காலத்தை உருவாக்கும் தளங்கள்.


உலகம் நிச்சயமற்ற காலகட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த சூழலில், இந்தியா – பிரான்ஸ் கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு ஒரு ஊக்க சக்தியாக திகழ்கிறது. பிரான்ஸின் நிபுணத்துவத்தையும் இந்தியாவின் அளவையும் நாங்கள் ஒன்றிணைக்கிறோம். நம்பகமான தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.


சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் கூட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மனித வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்வோம். பன்முகத்தன்மை, உரையாடல், ராஜதந்திரம் ஆகியவற்றின் மூலம் நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம் என தெரிவித்தார்.  (a)




Read More

Previous Post

செராட்டிங் குடும்பத்தின் துயரமான படுகொலைக்கு பகாங் சுல்தான் வருத்தம் | Makkal Osai

Next Post

உலக நாடுகளை கலங்க வைத்த Hammer ஏவுகணை.. இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் ரெடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
உலக நாடுகளை கலங்க வைத்த Hammer ஏவுகணை.. இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் ரெடி | India News (இந்தியா செய்திகள்)

உலக நாடுகளை கலங்க வைத்த Hammer ஏவுகணை.. இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் ரெடி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin