• Login
Wednesday, February 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

”இந்தியாவுடன் இணைந்து புதுமைகளை உருவாக்க தயார்” பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
”இந்தியாவுடன் இணைந்து புதுமைகளை உருவாக்க தயார்” பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 18, 2026 6:45 AM IST

பிரான்சில் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டு கால ஷெங்கன் (Schengen) விசா வழங்கும் நடைமுறை உறுதிப்படுத்தப்பட்டது. பிரான்சில் இந்தியாவின் UPI பணப்பரிமாற்றம் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் இமானுவேல்
பிரதமர் மோடி – பிரான்ஸ் அதிபர் இமானுவேல்

இந்தியாவுடன் இணைந்து புதுமைகளை உருவாக்க பிரான்ஸ் தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இரு நாடுகள் இடையேயான உறவுக்கு எல்லைகள் இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏ.ஐ உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நாளை மறுதினம் வரை நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகா, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்பட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று இந்தியா வந்தடைந்தார். இதனையடுத்து மும்பை ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி – இமானுவேல் மேக்ரான் சந்திப்பு நடைபெற்றது. பின்னர் தாஜ் ஹோட்டலுக்கு வருகை தந்த இமானுவேல் மேக்ரான், 2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள டாடா-ஏர்பஸ் நிறுவனத்தின் H125 இலகுரக ஹெலிகாப்டர் உற்பத்தியின் இறுதிக்கட்ட பணிகளை அதிகாரப்பூர்வமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர். பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பிறகு, இத்தகைய வசதியைப் பெறும் 4ஆவது நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதே போல, இந்தியக் கடற்படைக்காக 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்குவதற்கான சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

பிரான்சின் ‘சஃப்ரான்’ (Safran) நிறுவனத்துடன் இணைந்து ஹேமர் (HAMMER) ஏவுகணைகளை இந்தியாவிலேயே தயாரிக்க பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஒப்பந்தம் செய்துள்ளது. விண்வெளி சார்ந்து வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரு நாட்டு விண்வெளி நிறுவனங்களும் இணைந்து செயல்படத் தீர்மானிக்கப்பட்டது.

பிரான்சில் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டு கால ஷெங்கன் (Schengen) விசா வழங்கும் நடைமுறை உறுதிப்படுத்தப்பட்டது. பிரான்சில் இந்தியாவின் UPI பணப்பரிமாற்றம் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, 2026 ஆம் ஆண்டை “இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாக” அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதனையடுத்து இருவரும் ஒரே காரில் இந்தியா – பிரான்ஸ் புதுமை மன்றத்திற்குச் சென்றனர். ம்பையில் நடைபெற்ற ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சியை பிரதமர் மோடியும், இம்மானுவேல் மேக்ரானும் பார்வையிட்டனர். ன்னதாக, மும்பை சர்ச்கேட்டில் அதிபர் மேக்ரான் தனது பாதுகாப்புப் படையினருடன் நடைபயணம் சென்றார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, தனது நண்பர் மேக்ரானுக்கு மும்பை நகரம் மிகவும் பிடித்துப்போய்விட்டதாக தெரிவித்துள்ளார். திபர் மேக்ரான் தனது பயணத்தின் ஒரு பகுதியாக இன்று டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

Read More

Previous Post

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

Next Post

மோடி – மேக்ரான் முன்னிலையில் இந்தியா–பிரான்ஸ் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து – Sri Lanka Tamil News

Next Post
மோடி – மேக்ரான் முன்னிலையில் இந்தியா–பிரான்ஸ் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து – Sri Lanka Tamil News

மோடி – மேக்ரான் முன்னிலையில் இந்தியா–பிரான்ஸ் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin