கண்ணாடி பயன்படுத்திய போது, வலது கண் பார்வை 6/9 ஆகவும், இடது கண் பார்வை 6/6 என்ற அளவிற்கும் முன்னேற்றம் கண்டது. சாதாரண மனிதருக்கு இருக்க வேண்டிய முழுமையான பார்வைத் திறன் தான் 6/6 என்ற அளவு. 6/24 பார்வை என்பது ஒருவர் 24 அடி தூரத்திலிருந்து தெளிவாகப் படிக்கக்கூடியதை, நீங்கள் 6 அடி தூரத்திலிருந்து படிக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. இது மிதமான தூரப் பார்வைக் குறைபாடு, அதாவது அருகில் உள்ளவை தெளிவாகத் தெரியும், ஆனால் தொலைவில் உள்ளவை மங்கலாகத் தெரியும். இதுதான் தற்போது இம்ரான் கானுக்கு ஏற்பட்டுள்ளது.


