Last Updated:
தெலங்கானா அந்தர்கம் கிராமத்தில் கங்காதர், லட்சுமி, விஸ்வநாத் சம்பந்தப்பட்ட கொலைவெறி சம்பவம், ஜகத்தியாலா போலீசார் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானாவில் பெண்ணின் இரண்டாவது கணவனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் அந்தர்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர். இவருக்கு லட்சுமி என்பவருடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கங்காதர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அவர்களை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே வளைகுடா நாட்டிற்கு சென்றுள்ளார்.
குழந்தைகளுடன் அந்தர்கம் கிராமத்தில் லட்சுமி வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் சம்பாதித்து கணவன் அனுப்பிய பணத்தில், அவர் ஸ்மார்ட் போன் வாங்கியுள்ளார். பின்னர், செல்போனில் ரீல்ஸ் பார்ப்பது உட்பட சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ளார். அதில், போரண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாத் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
அவருடன் லட்சுமி மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். அதை அறிந்த உறவினர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இதையடுத்து, ஜக்தியாலா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து லட்சுமி மற்றும் அவரின் குழந்தைகளுடன் விஸ்வநாத் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து லட்சுமியின் கணவன் கங்காதர் சொந்த ஊர் திரும்பியுள்ளார். வந்த உடனே தனது மனைவி வேறொரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தபோதும், தனது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனைவியை மன்னித்து ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார். இதையடுத்து, உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தன்னுடன் வரும்படி மனைவியை அழைத்துள்ளார்.
ஆனால், கணவருடன் திரும்பிச் சென்று வாழ மாட்டேன் என்று லட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பஞ்சாயத்தில் இனிமேல் கணவன் – மனைவி இடையே ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறி பிரித்து விட்டுள்ளனர். வேறு வழியில்லாததால் இரு குழந்தைகளையும் கங்காதர் தன்னுடன் அழைத்துக் சென்றுள்ளார். ஆனால், ஒரு சில நாட்களிலேயே தாயார் இன்றி குழந்தைகள் பரிதவித்துள்ளனர்.
நாள் தோறும் அம்மா… எப்ப வருவாங்க? என்று குழந்தைகள் கேட்டுக் கொண்டே இருந்துள்ளனர். அதேவேளையில், லட்சுமி தனது இரண்டாவது கணவனுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இதனால், லட்சுமி மற்றும் விஸ்வநாத் மீது கங்காதர் கடும் கோபம் கொண்டுள்ளார். இந்த சூழலில் லட்சுமி, தனது இரண்டாவது கணவன் விஸ்வநாத்துடன் பைக்கில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். அவர்கள் கோயிலுக்கு சென்று திரும்பி வரும்போது, கங்காதர் மற்றும் அவரது நண்பரான திருப்பதி ஆகியோர் வழிமறித்துள்ளனர்.
இதில், படுகாயமடைந்த விஸ்வநாத் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜகத்தியாலா போலீசார் தலைமறைவான கங்காதர் மற்றும் அவரின் நண்பர் திருப்பதி ஆகியோரை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர். இரு குழந்தைகளை பரிதவிக்கவிட்டு வேறொருவருடன் மனைவி சென்ற ஆத்திரத்தில், அவரின் இரண்டாவது கணவனை, முதல் கணவர் திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


