ரயில் இயக்குநர்கள் சங்கத்தின் திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையான இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கவிருந்த வேலை நிறுத்தமானது போக்குவரத்து அமைச்சானது 20 இராணுவத்தினருக்கான ரயில் இயக்குநர் பயிற்சியை தற்காலிகமாக இடைநிறுத்த இணங்கியமையையடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினரை ரயில் இயக்குநர்களாக பயிற்சியளிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேவைகளை நிறுத்தப் போவதாக சங்கம் அச்சுறுத்தியிருந்தது.

